டொலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி
Pakistan
World Economic Crisis
By Dhayani
அமெரிக்க டொலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாவின் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது.
ஒரு டொலருக்கு நிகராக பாகிஸ்தான் 287 ரூபாய் 29 காசுகளை வழங்க வேண்டிய நிலையில் உச்சபட்ச சரிவை பாகிஸ்தான் ரூபாய் எட்டியுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் தனது நாட்டை மீட்க சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிடம் கடன் கோரியுள்ளது.
மேலும், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டு மக்களை காப்பாற்ற சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கோரியுள்ள நிலையில் கடன் தொகைக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.