இலங்கையில் விலை குறைந்துள்ள உணவுப் பொருட்களின் விலைகள்

Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Kirushanthi Feb 05, 2024 02:30 PM GMT

  இலங்கையில் ஆறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் இன்றைய தினம் (05.02.2024) குறைக்கப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி ,காய்ந்த மிளகாய், வெள்ளை சீனி, இறக்குமதி செய்யப்பட்ட உளுந்து, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் விலை குறைந்துள்ள உணவுப் பொருட்களின் விலைகள் | Depreciated Food Prices

விலை நிலவரங்கள்

காய்ந்த மிளகாய் கிலோ 870 ரூபாவாகவும் - வெள்ளை சீனி கிலோ 265 ரூபாவாகவும் - இறக்குமதி செய்யப்படும் உளுந்து கிலோ 900 ரூபாவாகவும் - பெரிய வெங்காயம் கிலோ 320 ரூபாவாகவும் - உருளைக்கிழங்கு கிலோ 120 ரூபாவாகவும் - பருப்பு கிலோ ரூ.295 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.