பிரதமர் மற்றும் அமைச்சர் விஜிதவின் உருவம் பொறித்த முத்திரைகள் தொடர்பில் வெளியான தகவல்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் உருவம் பொறித்த முத்திரைகள் வெளியிடப்பட்டமை தொடர்பில் தபால் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிரதமர் மற்றும் அமைச்சர் விஜித ஹேரத்தின் உருவம் பொறித்த முத்திரைகள் வெறும் நினைவுப் பரிசுகள் மட்டுமே என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிப்பயனாக்க முத்திரைகள்
அதேபோல், இந்த வருட உலக தபால் தினத்தை முன்னிட்டு, பிரதமர் அல்லது அமைச்சர் விஜித ஹேரத்தின் உருவம் பொறித்த முத்திரைகள் வெளியிடப்படவில்லை எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்த ஒரு நபரும் தனக்கு விருப்பமான படத்தைப் பயன்படுத்தி தனிப்பயனாக்க முத்திரைகளை அச்சிடலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விசேட சந்தர்ப்பங்களில் நினைவுப் பொருட்களாக தனிப்பயனாக்கப்பட்ட முத்திரைகளை தபால் திணைக்களம் பாரம்பரியமாக வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |