கடந்த வாரத்தில் 846 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

Colombo Gampaha Sri Lanka Dengue Prevalence in Sri Lanka
By Mayuri Jul 05, 2024 10:56 AM GMT

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கடந்த வாரத்தில் 846 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்திலிருந்து 269 டெங்கு நோயார்களும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 146 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

6 மாத காலப்பகுதிக்குள் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்கள்

இந்நிலையில், கண்டி மாவட்டத்திலிருந்து 93 டெங்கு நோயாளர்கள் காணப்பட்டுள்ளனர்.

கடந்த வாரத்தில் 846 டெங்கு நோயாளர்கள் அடையாளம் | Dengue In Sri Lanka Warning For Colombo People

கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் 28,239 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW