போதைப்பொருள் பாவனைக்கெதிராக போராட்டம்
காத்தான்குடியில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராகவும் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராகவும் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது நேற்று முன்தினம்(18.08.2023) இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள்,முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்,காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள சகல அமைப்புக்களும் இணைந்து இவ் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
போதைக்கு எதிராக சத்தியப்பிரமாணம்
இந்த பாரிய ஆர்ப்பாட்டம் காத்தான்குடி முகைதீன் பெரிய மெத்தை ஜும்மா பள்ளிவாயல் மற்றும் புதிய காத்தான்குடி அக்சா ஜும்மா பள்ளிவாயல் ஆகியவற்றிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
பின்னர் காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்தில் ஒன்று திரண்ட மக்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போதைக்கு எதிராக சத்தியப்பிரமாணத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காத்தான்குடி பள்ளிவாயில்களின் நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள், சட்டத்தரணிகள்,கல்வியாளர்கள், புத்திஜீவிகள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சத்திய பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், அண்மைய நாட்களில் காத்தான்குடி பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்திருப்பதையடுத்து இதிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் முகமாகவே இவ்வாறாதொரு ஆர்ப்பாட்டத்தை நடாத்தியதாக
காத்தான்குடி பள்ளிவாயல்கள், முஸ்லிம் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.