விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்குமாறு கோரிக்கை

Polonnaruwa Mahinda Amaraweera Sri Lanka Climate Change
By Laksi Dec 31, 2024 04:49 AM GMT
Laksi

Laksi

இயற்கை அனர்த்தங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகையை ஒரு லட்சம் ரூபா வரை அதிகரிக்குமாறு முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) கோரிக்கை விடுத்துள்ளார்.

பொலன்னறுவையில் (Polonnaruwa) நேற்று (30) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,  2018ஆம் ஆண்டு நான் விவசாய அமைச்சராக பதவியேற்றபோது வழங்கப்பட்ட 40,000 ரூபா கொடுப்பனவே தற்போதும் வழங்கப்படுகிறது.இது தற்போதைய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் என செய்தியும் வெளியிடப்பட்டது.

ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்: அருண் ஹேமச்சந்திரா தெரிவிப்பு

ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்: அருண் ஹேமச்சந்திரா தெரிவிப்பு

உர மானியம்

ஆனால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட 40,000 ரூபா இழப்பீட்டுத் தொகையை ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு எமது அரசாங்கத்தில் தீர்மானம் எடுத்திருந்தோம். அதனை நடைமுறைப்படுத்த தற்போதைய அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்குமாறு கோரிக்கை | Demand For Increase In Compensation To Farmers

விவசாயிகள் இந்த அரசாங்கத்தில் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த அரசாங்கத்துக்கு உர மானியத்தைக் கூட வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

எமது அரசாங்கத்தில் உர மானியம் 15,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டது. நாங்கள் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காக சகல முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தோம் என்றும் முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.  

சிறுவர்கள் தொடர்பில் நடைமுறையாகும் சட்டம்: வெளியானது வர்த்தமானி

சிறுவர்கள் தொடர்பில் நடைமுறையாகும் சட்டம்: வெளியானது வர்த்தமானி

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டின் முயற்சியில் அமைக்கப்படும் பாடசாலைக் கட்டிடம்

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டின் முயற்சியில் அமைக்கப்படும் பாடசாலைக் கட்டிடம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW