உயிரிழந்தவர்களுக்காக சபையில் குரல் கொடுத்த எதிர்க்கட்சியினர்...!

Parliament of Sri Lanka Sajith Premadasa
By Fathima Dec 03, 2025 08:45 AM GMT
Fathima

Fathima

அண்மைய பெரும் பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக அரசு ஒரு தேசிய துக்க தினத்தை அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இந்த விடயத்தை வலியுறுத்தினார்.

துக்க தினம்

இந்த பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மரியாதை செலுத்த ஒரு துக்க தினத்தை அறிவிக்க வேண்டுமென என சஜித் பிரேமதாஸ கோரியுள்ளார்.

உயிரிழந்தவர்களுக்காக சபையில் குரல் கொடுத்த எதிர்க்கட்சியினர்...! | Day Of Mourning In Sri Lanka

பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பது நமக்கு கடவுள் அளித்த புனித கடமை எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், இலங்கையின் கடினமான இந்த நேரத்தில் உதவிக்கரம் நீட்டிய அனைத்து நாடுகளுக்கும் அவர் நன்றியை தெரிவித்துள்ளார்.