உளநோய்க்கு பேரீச்சம் பழம்
பேரீச்சம் பழத்தில் உளநோய்க்கு ஆச்சரியப்படத்தக்க சிறப்புத்தன்மை உள்ளது, குறிப்பாக மதீனாவின் பேரீச்சம் பழத்திற்கு அதிலும் குறிப்பாக அஜ்வா வகை பேரீச்சம் பழத்திற்குதான் இச்சிறப்புத்தன்மை உள்ளது, அவை ஏழு பழங்களாக இருக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
நாள்தோறும் காலை வெறும் வயிற்றில் ஏழு அஜ்வா வகை பேரீச்சம் பழங்களை சாப்பிடுபவர்க்கு அந்த நாள் எந்த நஞ்சும் இடரளிக்காது. எந்த சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது.
இதை சஅத் பின் அபீவக்காஸ்(ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பேரீச்சம் பழத்தில் சூடு என்பது இரண்டாம் கட்டம்தான், அதில் காய்வுத்தன்மை தான் முதல்நிலை ஆகும். அதில் ஈரத்தன்மை உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நடுநிலையான தன்மை கொண்டது எனவும் கூறப்பட்டுள்ளது.
அது ஆரோக்கியத்தை பாதுகாக்கின்ற சிறப்பான உணவுப்பொருளாகும். பேரீச்சம்பழம் பெரும்பாலான உடல்களுக்கு ஒத்துக்கொள்கிறது, இயல்பான சூட்டை வலுப்படுத்தக்கூடியது.
மற்ற உணவுகளும் பழங்களும் உண்டாக்குகின்ற மோசமான கழிவுகளை பேரீச்சம்பழம் உண்டாக்குவதில்லை.
மாறாக யார் பேரீச்சம் பழத்தை உண்பதையே பழக்கமாக்கிக்கொண்டாரோ அவருடைய உடல் இயல்புகள் கெட்டுப்போவதை அது தடுக்கிறது.
ஏழு பேரீச்சம்பழங்கள் என்று சொன்ன காரணம் என்ன?
ஏழுக்கு ஷரீஅத்தில் ஒரு முக்கிய இடமுண்டு. உயர்ந்தோன்அல்லாஹ் ஏழு வானங்களையும், ஏழு பூமிகளையும் ஏழு நாள்களையும் படைத்து அமைத்துள்ளான்.
மனிதனுடைய நற்குணம் ஏழு கட்டங்களில் நிறைவடைகிறது. ஏழு தடவை தவாஃப் செய்வதை அல்லாஹ் தன் அடியார்களுக்கு விதித்துள்ளான்.
ஸஃபா, மர்வா இடையே ஓடுவது ஏழு தடவை, ஷமராவில் பொடிக்கற்களை எறிவது ஏழு ஏழு தடவை. இரண்டு ஈதுப்பெருநாள்களின் தொழுகைக்கான முதல் தக்பீரில் சொல்லப்படுவது ஏழு தக்பீர்.
சிறுவர்களுக்கு ஏழு வயதானதும் அவர்களை தொழ ஏவுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆகவே மற்ற எண்ணுக்கு இல்லாத சிறப்பு இந்த எண்ணுக்கு உள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது.
