துண்டிக்கப்படும் நீர் விநியோகம்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை
ஒரு வருட காலமாக நீர்க் கட்டணங்களை செலுத்தாதவர்களின் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிலுவையில் உள்ள கட்டணங்கள்
இது தொடர்பில் குறித்த சபை விடுத்துள்ள செய்தியில்,
நீர் பாவனையாளர்களினால் நிலுவை கட்டணங்கள் செலுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
மேலும், சில வாடிக்கையாளர்கள் நிலுவைத் தொகையை செலுத்தாததால், 14,500 மில்லியன் ரூபாய் நிலுவைத் தொகை உள்ளது.
இலங்கையிலுள்ள மொத்த நீர் பாவனையாளர்களில் 50% க்கும் குறைவானவர்களே உரிய திகதிக்கு முன்னர் பணத்தை செலுத்துகின்றனர்.
மேலும், சில பாவனையாளர்கள் கடந்த ஒரு வருடமாக கட்டணங்களை செலுத்தவில்லை. அத்தகைய பாவனையாளர்களின் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |