ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா..! பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு கூறும் விடயம்
Curfew
Sri Lanka
By Mayuri
அடுத்த வாரம் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிப்பது குறித்து சிந்திக்கவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
ஊரடங்கை பிறப்பிப்பதற்கான ஏற்பாடுகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், ஊரடங்கை பிறப்பிப்பதற்கான ஏற்பாடுகள் திட்டங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை.
பாதுகாப்பு அமைச்சர் வேண்டுகோள் விடுத்தால் மாத்திரமே ஊரடங்கை பிறப்பிப்போம்.
ஜனாதிபதிக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதற்கான அதிகாரம் உள்ளது, ஆனால் அதற்கான திட்டமிடல்களில் நாங்கள் ஈடுபடவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |