இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

Central Bank of Sri Lanka Sri Lanka
By Fathima Apr 23, 2023 12:24 AM GMT
Fathima

Fathima

இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை கணிசமாக குறைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

2022 டிசெம்பர் இறுதிக்குள், இலங்கையில் செயலில் உள்ள கடன் அட்டைகளின் மொத்த எண்ணிக்கை 52,991 இலட்சம் எனவும், இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள், இலங்கையில் செயல்பாட்டில் உள்ள மொத்த கடன் அட்டைகளின் எண்ணிக்கை 42,272 லட்சமாக இருந்தது.

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனை தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல் | Credit Cards Central Bank Of Sri Lanka

இதேவேளை, பெப்ரவரி மாதத்திற்குள் அது மேலும் 40,872 இலட்சமாக குறைந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த அட்டைகளுக்காக செலுத்த வேண்டிய மொத்த நிலுவைத் தொகை இந்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் 1 மில்லியன் 42,061 மில்லியன் ரூபாவாகவும், பெப்ரவரி மாத இறுதியில் 41,001 மில்லியன் ரூபாவாகவும் குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.