மன்னாரிலிருந்து யாழுக்கு அனுப்பட்ட இளம் தாய் மற்றும் சேயின் சடலங்கள்!
மன்னார் பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய் மற்றும் சேயின் சடலங்கள் மேலதிக பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை (19) குறித்த வைத்தியசாலையில் உயிரிழந்த தாய் மற்றும் சேயின் சடலமே பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
முதல் பிரசவம்
மன்னார் பட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளம் தாய் வேணுஜா என அழைக்கப்படும் ஜெகன் ராஜ சிறி திருமணமாகி 10 வருடங்கள் பிள்ளை இல்லை.
இந்த நிலையில் நேற்று முதல் பிரசவத்திற்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சையின் போது தாயும் சேயும் மரணமடைந்துள்ளனர்.
இதனால், உறவினர்கள், பெற்றோர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றினைந்து மகப்பேற்று விடுதியில் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் வைத்தியசாலையில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை
இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், இச்சம்பவ இடத்திற்கு மன்னார் நீதவானும் வருகை தந்துள்ளார்.
அத்துடன் இறந்த தாய் மற்றும் சேயின் சடலங்களை பிரதே பரிசோதனைக்காகவும் மேலதிக விசாரணைகளுக்காகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
நீதவானின் உத்தரவிற்கு அமைய நேற்றையதினம் சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |