உம்ரா யாத்ரீகர்களுக்கு ஜெத்தா இலங்கைத் துணைத் தூதரகம் அவசர எச்சரிக்கை

Saudi Arabia Middle East
By Sajithra Oct 14, 2026 03:59 AM GMT

பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, உம்ரா புனிதப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள இலங்கைப் பிரஜைகள் தங்களது பயண ஏற்பாடுகளில் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. 

ஜெத்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் (Consulate General of Sri Lanka in Jeddah) இது குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை 

சவூதி அரேபியாவிற்கான மற்றும் அங்கிருந்தான விமானச் சேவைகளில் திடீர் தடங்கல்கள் அல்லது மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன எனவே, பயணம் செய்யவுள்ள யாத்ரீகர்கள் தங்களது உம்ரா குழுப் பிரதிநிதிகள் அல்லது பயண முகவர்களுடன் தொடர்ச்சியாகத் தொடர்பில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உம்ரா யாத்ரீகர்களுக்கு ஜெத்தா இலங்கைத் துணைத் தூதரகம் அவசர எச்சரிக்கை | Controversy Surrounding Port City Visa Issuance

எதிர்பாராத சூழ்நிலைகள் அல்லது அவசர நிலைகளை எதிர்கொள்ளக் கூடிய வகையில் தகுந்த மாற்றுப் பயண ஏற்பாடுகளை (Contingency Arrangements) தயாரித்து வைக்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

அதேநேரம்,சவூதி அரேபியாவில் தங்கியுள்ள இலங்கை யாத்ரீகர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் உதவிகளுக்கு ஜெத்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தையோ அல்லது ரியாதிலுள்ள தூதரகத்தையோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.