நாடாளுமன்றில் அரசமைப்பு திருத்தங்கள் எவற்றையும் சமர்ப்பிக்கப் போவதில்லை: மகிந்த அமரவீர
Parliament of Sri Lanka
Mahinda Amaraweera
Election
By Mayuri
எதிர்வரும் வாரங்களில் நாடாளுமன்றத்தில் அரசமைப்பு திருத்தம் தொடர்பான எதனையும் சமர்ப்பிக்கப் போவதில்லை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீர்வை காண்பதற்கான திருத்தங்கள்
மேலும் தெரிவிக்கையில், 19வது திருத்தத்தில் காணப்படும் குறைபாடுகளுக்கு தீர்வை காண்பதற்கான திருத்தங்களை தேர்தலிற்கு பின்னர் பரிசீலிக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தேர்தல்களை தாமதிக்கும் நோக்கிலேய அரசமைப்பு திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன என எதிர்கட்சியினர் தெரிவிப்பதை அவர் நிராகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |