கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து விபத்து

Colombo Mannar Sri Lanka
By Harrish Jul 26, 2024 06:07 PM GMT

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேரூந்து புத்தளம், காக்கா பள்ளி பாதையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் இன்று(26.07.2024) இடம்பெற்றுள்ளது.

பேரூந்து பகுதியளவில் சேதம்

புத்தளம், காக்கா பள்ளி பாதையில் பேரூந்து பயணித்து கொண்டிருந்த வேளை அருகில் இருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து விபத்து | Colombo To Mannar Private Luxury Bus Accident

அத்துடன், விபத்தின் போது பேரூந்தில் பயணித்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுள்ளது.

மேலும், விபத்தினால் எரிபொருள் நிரப்பும் இயந்திரத்தின் மேற்பகுதியும் பேரூந்து பகுதியளவிலும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து விபத்து | Colombo To Mannar Private Luxury Bus Accident

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW