உணவு பொருட்களின் விலையில் ஏற்படும் மாற்றம்! மற்றுமொரு விலை அதிகரிப்பு

Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan Peoples
By Chandramathi Mar 03, 2024 01:28 AM GMT

தற்போது சந்தையில் பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கபட்டுள்ளன.

அந்தவகையில் தேங்காய் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை அதிகரிப்பு

இதன்படி 80-90 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் ஒன்று தற்போது 100-150 ரூபாவாக அதிகரித்துள்ளது.

உணவு பொருட்களின் விலையில் ஏற்படும் மாற்றம்! மற்றுமொரு விலை அதிகரிப்பு | Coconut Price In Sri Lanka 

இதேவேளை பல்வேறு உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் கோழி இறைச்சியின் விலையும் 40 ரூபா முதல் 60 ரூபா வரை அதிகரிக்கப்பட்டு 1,180 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.