தேங்காய் எண்ணெய் தொழிற்சாலைகள் : வெளியான தகவல்

Mahinda Amaraweera Sri Lanka Economy of Sri Lanka
By Shalini Balachandran Aug 08, 2024 10:22 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

3000 உள்ளுர் தேங்காய் எண்ணெய் தொழிற்சாலைகளை மீட்பதற்கான திட்டங்களை எதிர்காலத்தில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது தொடர்பான பிரேரணையை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.

இது குறித்து உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி கைத்தொழில்கள் மற்றும் விவசாய பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்தோடு, தற்போது நாட்டில் வருடாந்த நுகர்வுக்குத் தேவையான தேங்காய் எண்ணெய்யின் அளவு 290,000 மெற்றிக் தொன்களாகும்.

அம்பாறையில் வீதியோரங்களில் திரியும் கட்டாக்காலி மாடுகள்: பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை

அம்பாறையில் வீதியோரங்களில் திரியும் கட்டாக்காலி மாடுகள்: பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கைக்கு இறக்குமதி

இருப்பினும், தற்போது 40,000 மெட்ரிக் தொன் மாத்திரமே உற்பத்தி செய்யப்படுகின்றதெனவும் எஞ்சியுள்ள 250,000 மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் வடிவில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேங்காய் எண்ணெய் தொழிற்சாலைகள் : வெளியான தகவல் | Coconut Oil Production Industry In Sri Lanka

மேலும், தேங்காய் எண்ணெய் மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரி தொடர்பில் நிதியமைச்சு விசேட கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆயுர்வேத வைத்தியர்களுக்கும் மேலதிக சேவை கொடுப்பனவு

ஆயுர்வேத வைத்தியர்களுக்கும் மேலதிக சேவை கொடுப்பனவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW