தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையால், ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கக்கூடும் என நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய திட்டத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே அறிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (29.01.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
சுத்தமான தேங்காய் எண்ணெய்
குறைந்த விலையில் தூய தேங்காய் எண்ணெய்யை கொள்வனவு செய்வதற்கான உரிமையை நுகர்வோர் பெறுவதை உறுதி செய்யுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

இந்த சூழ்நிலையில் பாம் எண்ணெய் மற்றும் பல வகை எண்ணெய்கள் சந்தையில் அதிகரிக்க கூடும்.
இலங்கை நுகர்வோரின் உணவு கலாசாரத்தின்படி, இறைச்சி, மீன் மற்றும் பிற உணவுகள் பெரும்பாலும் பொரித் தெடுக்கப்படுகின்றன. ஆனால், தேங்காய் எண்ணெய் மட்டுமே பொரிக்க ஏற்றதாகும்.
பாம் எண்ணெய் மற்றும் பிற எண்ணெய்களைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு கேடானது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
விலை அதிகரிப்பு
எனவே, குறைந்த விலையில் சுத்தமான தேங்காய் எண்ணெய்யைப் பெறுவதற்கான நுகர்வோரின் உரிமையை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.

தேங்காய் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்பவர்கள் அந்த உரிமையை மீறுவதாகத் தெரிகிறது.
நம் நாட்டின் நுகர்வோர் உட்கொள்ள வேண்டிய தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்யக் கிடைக்கும் தேங்காய்களை ஏற்றுமதியாளர்கள் வாங்கி, டொலர்களை சம்பாதிக்க தேங்காய் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்கிறார்கள்.
இதன் விளைவாக உள்ளூர் சந்தையில் தேங்காய் எண்ணெய் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார்.