ஈரானில் இணையத் தடையை முறியடிக்க இரகசிய ஸ்டார்லிங்க் நெட்வெர்க்குகள்

Iran Middle East Starlink
By Sajithra May 03, 2026 02:01 AM GMT

ஈரானில் நிலவும் கடுமையான இணையத் தடையை முறியடிப்பதற்காக, சட்டவிரோதமாக 'ஸ்டார்லிங்க்' (Starlink) செயற்கைக்கோள் இணையக் கருவிகளை நாட்டுக்குள் கடத்தும் இரகசிய நெட்வெர்க் ஒன்று செயல்பட்டு வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த நெட்வொர்க்கில் பணியாற்றும் ஈரானியர் கூறுகையில்,

"கூடுதல் நபர் ஒருவர் இணையத்தைப் பயன்படுத்த முடிந்தாலும், அது ஒரு வெற்றியாகவே நான் கருதுகிறேன். இதற்காக எத்தகைய ஆபத்தையும் எதிர்கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

ஈரானிய அரசாங்கத்தினால் அடையாளம் காணப்பட்டால், உள்நாட்டில் உள்ள தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் என்ற அச்சத்திலும் அவர் இந்த ஆபத்தான பணியைத் தொடர்ந்து வருகிறார்.

ஈரானில் நிலவும் தகவல் இருட்டடிப்பை உடைக்க இத்தகைய ரகசியக் குழுக்கள் உயிரைப் பணையம் வைத்துச் செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.