விமான சேவை மூலமாக அனுப்பப்பட்டுள்ள சிகரட்டு பொதிகள்
துபாயிலிருந்து விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சிகரட்டு பொதிகள் இலங்கை சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சோதனைக்குட்படுத்தப்பட்ட பொதி
கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி கொழும்பு - மட்டக்குளி பிரதேசத்தில் உள்ள முகவரி ஒன்றிற்கு கட்டுநாயக்க விமான தபால் சேவை மூலம் குறித்த பொதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சிகரட் பொதிகளை கொண்டு செல்ல உரிமையாளர்கள் யாரும் வராததன் காரணத்தால் சுங்க அதிகாரிகளால் பொதி சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது 3 கோடி ரூபா பெறுமதியான ஒரு இலட்சத்து 60 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |