இலங்கையில் மேற்கொள்ளப்படும் இணைய மோசடியால் வெளிநாட்டவர் பாதிப்பு
இலங்கையில் மேற்கொள்ளப்படும் சீனர்களின் இணையவழி மோசடிகள் காரணமாக பெரும்பாலும் வெளிநாட்டவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மைக்காலமாக சீனப்பிரஜைகள் இலங்கையில் வீசா இன்றி தங்கியிருத்தல், இணையவழி மோசடிகள் தொடர்பில் கூடுதலான அளவில் கைது செய்யப்படுகின்றனர்.
கடந்த ஆண்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட சீனர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.
இணைய மோசடி
இந்தநிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், குறித்த சீனப்பிரஜைகளின் இணைய மோசடி பெரும்பாலும் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்தே நடத்தப்படுவது தெரிய வந்துள்ளது.
அத்தோடு, இலங்கையர்கள் அவற்றில் மிகச் சொற்பமான அளவிலேயே பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள சீனப்பிரஜைகளை தமது நாட்டுக்கு நாடு கடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை இலங்கையில் உள்ள சீனத்தூதரகம் முன்னெடுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |