கோழி இறைச்சி விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Chandramathi Apr 11, 2023 10:13 PM GMT

சந்தையில் கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பண்டிகை காலம் என்பதால் கோழிக்கறி தட்டுப்பாடு காரணமாக விலை உயர வாய்ப்புள்ளது என வியாபாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கோழி இறைச்சியின் விலை

கோழி இறைச்சி விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு | Chicken Meat Price In Sri Lanka

தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 1350 ரூபாவுக்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக  நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு பல பொருட்களின் விலைகள் குறைக்கபடும் அதேவேளை சில பொருட்களின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.