அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கான உணவில் ஏற்படவுள்ள மாற்றம்

Sri Lanka Sri Lankan Peoples Hospitals in Sri Lanka
By Rukshy Jun 29, 2024 04:51 AM GMT
Rukshy

Rukshy

அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக இலங்கை போசாக்கு நிபுணர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த திட்டமானது முதலில் மஹரகம வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் இந்த திட்டத்திற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க சுகாதார செயலாளர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முதல் கட்டம்

இந்நிலையில், அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் வீண்விரயத்தைக் குறைத்தல் என்பனவற்றின் அடிப்படையில் உணவு முறையில் மாற்றத்தை ஏற்படுத்த இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்கள் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

change-in-patient-diet-hospitals-

இதற்கமையவே வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவை மாற்றியமைக்கும் செயற்திட்டத்தின் முதல் கட்டம் மஹரகம வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW