இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Sri Lanka
Sri Lanka Inflation
Economy of Sri Lanka
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மூலம் அளவிடப்படும் இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் ஆகஸ்ட் 2024 இல் 1.1 வீதமாகக் குறைந்துள்ளது,
இது ஜூலை மாதத்தில் 2.5 வீதமாக இருந்ததாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறிது அதிகரிப்பு
உணவுப் பணவீக்கமும் ஜூலையின் 2.9வீதத்தில் இருந்து 2.3வீதமாகக் குறைந்துள்ளது.
அதே நேரத்தில் உணவு அல்லாத பணவீக்கத்தில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் 204.1 ஆக இருந்தது, இது முதல் மாதத்துடன் ஒப்பிடும்போது 2.8 குறியீட்டு புள்ளிகளால் குறைந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |