சுகாதார அமைச்சரவை பதவிகளில் மாற்றம்

Dr Rajitha Senaratne Ranil Wickremesinghe Ministry of Health Sri Lanka
By Dharu Jun 22, 2024 12:06 PM GMT
Dharu

Dharu

சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரது பதவிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து மாற்றப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜித சேனாரத்ன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அடுத்த மாதம் இறுதி சில நாட்களில் சந்திக்கவுள்ளதாகவும், அடுத்த மாதம் முதல் வாரத்தில் சுகாதார அமைச்சராக ராஜித சேனாரத்ன பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

[DXY587C ]

உயர் பதவிகள்

அத்துடன், சுகாதார அமைச்சு, பணிப்பாளர் நாயகம், மருத்துவ விநியோகப் பிரிவு, மருந்து ஒழுங்குமுறை ஆணையம், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், அரச மருந்துக் கூட்டுத்தாபனம், மருந்து ஒழுங்குமுறை ஆணையம் போன்ற பல உயர் பதவிகள் மாற்றப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.

சுகாதார அமைச்சரவை பதவிகளில் மாற்றம் | Change In Health Cabinet Posts

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW