நாட்டு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வழங்கிய உதவி

Chandrika Kumaratunga Harini Amarasuriya World Cyclone Ditwah
By Fathima Dec 09, 2025 04:58 AM GMT
Fathima

Fathima

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதற்கும் மீள்குடியேற்றுவதற்கும் ஆதரவளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நிதி உதவி வழங்கியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை சார்பில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

நிதி பங்களிப்பு

பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதற்கும் மீள்குடியேற்றுவதற்கும் ஆதரவளிப்பதற்காக நிறுவப்பட்ட அரசாங்க நிதிக்கு ரூபா 250 மில்லியனை பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை வழங்கியுள்ளது.

நாட்டு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வழங்கிய உதவி | Chandrika Gives 250 Million For Disaster Recovery

இந்த பங்களிப்பு நிதியை பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் சந்திரிகா குமாரதுங்க வழங்கியுள்ளார்.

அண்மையில் ஏற்பட்ட பாதகமான வானிலையால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு மறுகட்டமைப்பு மற்றும் உதவிக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.