எங்களுக்கு பயமில்லை! தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
சேவையை விட்டு விலகியதாக கருதப்படும் அறிவிப்பிற்கு அமைய தமது சேவையின்றி தொடருந்து சேவையை முன்னெடுத்து செல்ல முடியுமாயின் அதனை செய்து காட்டுமாறு தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன சவால் விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களுக்கு பயமில்லை, வீட்டில் இருக்கவும் நாங்கள் தயார். இந்த அடக்குமுறைக்கு எதிராக நாளை மேலும் பல தொழிற்சங்கங்கள் திரளும்.
பயணிகளுக்கு ஏற்படும் சிரமம்
தொடருந்து நிலைய அதிபர் ஒருவர் கூட இந்த கடிதங்களுக்கு பயப்படப் போவதில்லை. எங்களுக்கு வேறு வழியில்லை. பயணிகளுக்கு ஏற்படும் சிரமம் குறித்து அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
தொடருந்து திணைக்களத்தின் பதில் பொது முகாமையாளர் எஸ்.எஸ்.முதலிகே விடுத்த அறிவித்தலுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |