பில்லியன் கணக்கான நட்டத்தை பதிவு செய்துள்ள மத்திய வங்கி: சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Central Bank of Sri Lanka Nandalal Weerasinghe Udaya Gammanpila
By Sivaa Mayuri May 07, 2024 02:10 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

Courtesy: Sivaa Mayuri

இலங்கை மத்திய வங்கி, தொடர்ச்சியாக இரண்டு வருடங்களாக பில்லியன் கணக்கான ரூபாய் நட்டத்தை பதிவு செய்திருந்த போதிலும், அதன் வரலாற்றில் மிகப்பெரிய வித்தியாசத்தில் தனது ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) குற்றம் சுமத்தியுள்ளார்

2023 இல் இலங்கை மத்திய வங்கியின் நிகர இழப்பு 114 பில்லியன் ரூபாய்கள் எனவும், 2022ல் நிகர இழப்பு 374 பில்லியன் ரூபாய்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் தொடர்ச்சியாக நட்டத்தை சந்திக்கும் பட்சத்தில், அந்த நிறுவனத்தின் சலுகைகள், ஊக்குவிப்பு மற்றும் சம்பள உயர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டு இடைநிறுத்தப்படும் என்பதே வழமையான செயற்பாடாக இருக்கும்.

பலத்த பாதுகாப்புடன் டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்படும் பாதாள உலகக்கும்பல் தலைவர்

பலத்த பாதுகாப்புடன் டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்படும் பாதாள உலகக்கும்பல் தலைவர்

சம்பள உயர்வு

எவ்வாறாயினும், மத்திய வங்கி தனது ஊழியர்களுக்கு அதிகூடிய சம்பள உயர்வை வழங்கி வருவதாக முன்னாள் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பில்லியன் கணக்கான நட்டத்தை பதிவு செய்துள்ள மத்திய வங்கி: சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Central Bank Registered The Transaction

எனவே, நாட்டை ஏமாற்றியதற்காக மத்திய வங்கியின் ஆளுநரும் அதன் நிர்வாக சபையும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கம் மற்றும் வங்கிகளுக்கு கடன் வழங்கி வட்டியை வசூலிப்பதன் மூலம் மத்திய வங்கி இலாபம் ஈட்டக்கூடிய ஒரு வழிமுறை உள்ளது

பணத்தை அச்சிடுவதற்கு மத்திய வங்கிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதால் இது சாத்தியமாகிறது என்றும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்  

கனடாவில் உயிரிழந்த தமிழ் தம்பதி: சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் உயிரிழந்த தமிழ் தம்பதி: சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல்

முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட அல்சைமர் நோயின் மரபணு

முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட அல்சைமர் நோயின் மரபணு