வட்டி வீதங்கள் தொடர்பில் மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

Central Bank of Sri Lanka
By Mayuri Sep 27, 2024 03:44 AM GMT
Mayuri

Mayuri

இலங்கை மத்திய வங்கி, கொள்கை வட்டி விகிதங்களான, துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் (SDFR) மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் (SLFR) தற்போதைய மட்டத்திலேயே பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அண்மையை அறிவிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

அதன்படி, துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 8.25 சதவீதம் மற்றும் 9.25 சதவீதமாக பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வட்டி வீதங்கள் தொடர்பில் மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு | Central Bank Of Sri Lanka Announcement

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW