இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

Central Bank of Sri Lanka Sri Lanka
By Mayuri Jun 30, 2024 04:42 AM GMT
Mayuri

Mayuri

190,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையானது எதிர்வரும் ஜூலை 3ஆம் திகதி முன்னெடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

திறைசேரி உண்டியல்கள்

இதன்படி 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 90 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளன.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு | Central Bank Of Sri Lanka Announcement

மேலும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW