இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

Central Bank of Sri Lanka Sri Lankan rupee
By Mayuri Oct 13, 2024 05:58 AM GMT

97,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி இந்த திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

முதிர்வுக் காலத்தைக் கொண்ட திறைசேரி உண்டியல்கள்

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 37,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 20,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு | Central Bank Of Ceylon Announcement

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW