கொழும்பு இடம்பெற்ற விபத்து! இளைஞர் ஒருவர் பலி

Colombo Accident
By Fathima Jan 09, 2026 07:53 AM GMT
Fathima

Fathima

ஹொரணை-கொழும்பு வீதியின் பொகுனுவிட்ட வெலிகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (09) அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வீடொன்றின் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து

இதன்போது விபத்தில் படுகாயமடைந்த நபர், ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு இடம்பெற்ற விபத்து! இளைஞர் ஒருவர் பலி | Car Accident In Colombo

மில்லனிய, பரகஸ்தோட்டை, பெல்பொல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மக்கோனகே அகில விஷான் பெர்னாண்டோ என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளதுடன், அதிக வேகம் காரணமாக மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.