ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட உலங்கு வானூர்திகள்! விமானப்படை வெளியிட்டுள்ள அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இலவசமாக உலங்கு வானூர்திகள் வழங்கப்படவில்லை என இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.
கட்டணம் செலுத்திய உரிய நடைமுறைகளின் அடிப்படையில் சில வேட்பாளர்கள் உலங்கு வானூர்திகளை பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு
விமானப்படைக்கு சொந்தமான விமானங்களை சில ஜனாதிபதி வேட்பாளர்கள் துஷ்பிரயோகம் செய்வதாக அண்மையில் ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என விமானப்படை அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சிற்கு பணம் செலுத்தி சில வேட்பாளர்கள் உலங்கு வானூர்திகளை பயன்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எந்தவொரு வேட்பாளரும் உலங்கு வானூர்திகளை இலவசமாக பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.