16 வயது சகோதரியை தகாத முறைக்கு உட்படுத்திய சகோதரன்

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Raghav Jun 29, 2024 06:02 PM GMT

கொழும்பு(Colombo) - ஹோமாகம (Homagama) பிரதேசத்தில் 16 வயது சகோதரியை தகாத முறைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் மூத்த சகோதரன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை இன்று(29.06.2024) இடம்பெற்றுள்ளது.

ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என காவல்துறையினர் கூறியுள்ளார். அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹோமாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

16 வயது சகோதரியை தகாத முறைக்கு உட்படுத்திய சகோதரன் | Brother Sexually Abused 16 Year Old Sister 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஹோமாகம தலைமையக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW