கிண்ணியா- குறிஞ்சாகேணி பாலத்தின் பாதுகாப்பு வேலி இனந் தெரியாதோரினால் உடைப்பு

Trincomalee Government Of Sri Lanka Sri Lankan Peoples Eastern Province
By Laksi Jan 06, 2025 09:55 AM GMT
Laksi

Laksi

கிண்ணியா - குறிஞ்சாகேணி பாலத்தில் பயணிகளின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகளின் ஒரு பகுதி உடைத்து ஆற்றில் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் இன்று (6 )அதிகாலை இனந் தெரியாதோரினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

1977 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலம், காலாகாலமாக அரிப்புக்கு உள்ளாகி, அண்மைக்காலமாக இடிந்து விழும் நிலையை அடைந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியான மற்றொரு பரீட்சை வினாத்தாள்

சமூக வலைத்தளங்களில் வெளியான மற்றொரு பரீட்சை வினாத்தாள்

பாலம் புனரமைப்பு

இந்த நிலையில், புதிதாக நிர்மாணித்து தருமாறு மக்கள் தொடர்ச்சியாக கவன ஈர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டு வந்ததன் காரணமாக, இந்தப் பாலத்தை நிர்மாணிப்பதற்காக 2021 ஆண்டு 226. 7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

கிண்ணியா- குறிஞ்சாகேணி பாலத்தின் பாதுகாப்பு வேலி இனந் தெரியாதோரினால் உடைப்பு | Breach Of Security Fence Of Kinniya Bridge

இந்த நிலையில் (2021.04.22) பாலத்தின் மீள் கட்டுமான பணிகள் பணிகள் இடம் பெற்றிருந்தபோது, போக்குவரத்துக்காக தற்காலிகமாக படகு ஒன்று போடப்பட்டிருந்தது.

இந்தப் படகு (2021.11.21) விபத்துக்குள்ளானதில், ஐந்து சிறுவர்கள் உட்பட 8 பேர் பலியான துயரமான சம்பவம் ஒன்று, அன்று இடம்பெற்றிருந்தது . எனினும், இந்த பாலம் இன்னும் புனரமைப்பு செய்யப்படவில்லை.

இந்தப் பாலத்தின் ஒரு பகுதியில் பயணிகளின் பாதுகாப்புக்காக இரும்பு கம்பிகள் மாத்திரம் நடப்பட்டிருந்தன. இந்த கம்பிகளே இன்று இனம் தெரியாததோரினால் உடைத்து ஆற்றில் வீசப்பட்டுள்ளன.

திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்

திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்

பொதுமக்கள் கோரிக்கை

ஏற்கனவே, இந்தப் பாலத்தின் ஊடாக ஆபத்தான கட்டத்தில் பயணம் செய்த நாங்கள், மேலும் ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா- குறிஞ்சாகேணி பாலத்தின் பாதுகாப்பு வேலி இனந் தெரியாதோரினால் உடைப்பு | Breach Of Security Fence Of Kinniya Bridge

பாதுகாப்பற்ற இந்த பாலத்தின் ஊடாக, இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் பயணம் செய்வது? பொறுமை இழந்த மக்கள், ஆத்திரமடைந்தே இதனைச் செய்திருக்கிறார்கள் என்றும் சிலர் கூறுகின்றனர்.

மக்கள் எவ்வளவு காலத்துக்கு தான் பொறுமை காப்பது? புதிய அரசாங்கத்திலாவது இந்த பாலம் நிர்மாணிக்கப்படுமா? என்று மேலும் பொதுமக்கள் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு: முன்னாள் எம்.பியின் கோரிக்கை

வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு: முன்னாள் எம்.பியின் கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery