கடலில் மிதந்து வந்த போத்தலில் உள்ள திரவத்தை குடித்த இருவர் பலி : புத்தளத்தில் சம்பவம்
கடலில் மிதக்கும் போத்தலினுள் இருந்த திரவத்தை உட்கொண்டதில், புத்தளத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இருவர் தற்போது புத்தளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம், நுரைச்சோலை பகுதியில் உள்ள மீன்பிடி குடிசையில் இருந்தபோது, நான்கு பேர் கொண்ட குழுவினரே இவ்வாறு கடலில் மிதக்கும் போத்தலினுள் இருந்த திரவத்தை உட்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
அத்துடன், மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

அதன்போது மீன்பிடி குடிசையில் மற்றொரு நபரின் சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
You May Like This Video...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |