இஸ்ரேலின் இறையாண்மையைத் திணிக்கும் மசோதா : கண்டிக்கும் கத்தார் மற்றும் சவூதி அரேபியா

Benjamin Netanyahu Israel Israel-Hamas War Gaza
By Faarika Faizal Oct 24, 2025 07:16 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

இஸ்ரேலிய நாடாளுமன்றம், மேற்குக் கரையின் மீது இஸ்ரேலின் இறையாண்மையைத் திணிக்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. மேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைப்பதை அனுமதிக்கும் மசோதா இது என கூறப்படுகிறது.

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் 120 உறுப்பினர்களில் 25 வாக்குகளால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது, 24 பேர் எதிராக வாக்களித்தனர். 

இஸ்ரேல் அமெரிக்காவின் பாதுகாப்பு மண்டலம் அல்ல : நெதன்யாகு கண்டனம்

இஸ்ரேல் அமெரிக்காவின் பாதுகாப்பு மண்டலம் அல்ல : நெதன்யாகு கண்டனம்

சர்வதேச சட்ட மீறல்  

அதேவேளை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சியின் பல உறுப்பினர்கள் வாக்களிப்பில் இருந்து விலகியதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்குக் கரையில் உள்ள மாலே அடுமிமின் பெரிய குடியேற்றத்தை இணைப்பதற்கான மற்றொரு மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் இறையாண்மையைத் திணிக்கும் மசோதா : கண்டிக்கும் கத்தார் மற்றும் சவூதி அரேபியா | Bill Imposing Israeli Sovereignty Passed

இருப்பினும், இந்த மசோதா சட்டமாக மாற, அது பாராளுமன்றத்தில் மூன்று முறை நிறைவேற்றப்பட்டு, பின்னர் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு குழுக்கள் உட்பட குழு அளவிலான விவாதங்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.

அதேவேளை மேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைப்பதை அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றத்தை கட்டார் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் சர்வதேச சட்ட மீறல் என்று கடுமையாக கண்டித்துள்ளன.


You May Like This Video...

காசாவிற்கு உதவியை அனுமதிக்க இஸ்ரேல் கடமைப்பட்டுள்ளது: ஐ.நா. உயர் நீதிமன்றம் அறிவிப்பு

காசாவிற்கு உதவியை அனுமதிக்க இஸ்ரேல் கடமைப்பட்டுள்ளது: ஐ.நா. உயர் நீதிமன்றம் அறிவிப்பு

பலஸ்தீன போர்க்குற்றங்களுக்காக இஸ்ரேல் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும்: ஐ.நாவுக்கு மகஜர்

பலஸ்தீன போர்க்குற்றங்களுக்காக இஸ்ரேல் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும்: ஐ.நாவுக்கு மகஜர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW