மட்டக்களப்பில் யானை தாக்குதலில் உயிரிழந்த தாயின் குடும்பத்திற்கு இழப்பீடு

Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Aug 06, 2025 11:44 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பில் (Batticaloa) யானை தாக்குதலில் உயிரிழந்த இளம்தாயின் குடும்பத்துக்கு தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இன்று (05) வைத்தியசாலையில் வைத்து வவுணதீவு பிரதேச செயலகத்தினால், ஒரு இலச்சம் ரூபாவை இழப்பீடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஆயித்தியமலை மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்குதலில் இளம் தாயார் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 வயது குழந்தை தெய்வாதீனமாக படுகாயங்களுடன் உயிர் தப்பிய சம்பவம் திங்கட்கிழமை (04) இரவு இடம்பெற்றது

வீழ்ச்சியடையும் தங்க விலை! வாங்கவுள்ளோருக்கு அறிவிப்பு

வீழ்ச்சியடையும் தங்க விலை! வாங்கவுள்ளோருக்கு அறிவிப்பு

இழப்பீடு

அதன்படி, தேசிய மக்கள் சக்தி சுற்றுலாத்துறை மாவட்ட பணிப்பாளரும், மட்டு மாநகரசபை உறுப்பினருமான எஸ்.சுரேஸ்றொபேட் இனால், பிரதேச செயலாளர் மற்றும் கிழக்கு ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் யானை தாக்குதலில் உயிரிழந்த தாயின் குடும்பத்திற்கு இழப்பீடு | Batticaloa Hec Victim S Family Aid

அதனை தொடர்ந்து, பிரதேச செயலகம் ஊடாக உயிரிழந்த இளம் தாயின் குடும்பத்திற்கு உடனடியாக இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான காசோலையை மட்டு போதனா வைத்தியசாலையில் வைத்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியினர் வழங்கி வைத்தனர்.

மட்டக்களப்பு காணி - எல்லை பிரச்சனை மீண்டும் இழுத்தடிப்பு

மட்டக்களப்பு காணி - எல்லை பிரச்சனை மீண்டும் இழுத்தடிப்பு

வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் வைத்தியர்கள்

வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் வைத்தியர்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW