மட்டக்களப்பு மாநகரத்தை அழகுபடுத்தும் பணிகள் முன்னெடுப்பு
மட்டக்களப்பு (Batticaloa) நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் நோக்குடன் மாநகரத்தை அழகுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த செயற்பாடானது கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பெயரில் மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளர் எஸ்.தனஜெயன் தலைமையில் இன்று (7) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளப்பெருக்கினால் வாவி பெருக்கெடுத்ததன் காரணமாக மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியை அண்டிய பகுதிகள் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி காணப்பட்டுள்ளதால் சுற்றாடல் அசுத்தமடைந்துள்ளது.
சிரமதான பணிகள்
அத்துடன், இதனை அண்டிய பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் உயிர் வாழும் மீன் இனங்கள் பாதிக்கப்பட்டதுடன், கால்நடைகளும், அவற்றை உண்பதால் அவைகளும் பாதிப்படைந்துள்ளன.
இதனைக் கருத்திற் கொண்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் நகரைச் சுத்தப்படுத்தும் பாரிய சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, மாநகர சபையின் ஊழியர்கள் சுகாதார தரப்பினர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |