கோட்டாபயவின் நூலை வாசிக்க போவதில்லை! பசில்

Basil Rajapaksa Gotabaya Rajapaksa
By Kamal Mar 20, 2024 01:22 AM GMT

முன்னான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நூலை தாம் வாசிக்கப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஊடகமொன்றுடனான நேர்காணலின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவின் நூலை வாசிக்க போவதில்லை! பசில் | Basil Gota Book  

கோட்டாபய அண்மையில் வெளியிட்ட நூலை தாம் இன்னமும் வாசிக்கவில்லை எனவும் வாசிக்கும் உத்தேசமும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நூலின் பிரதி

இந்த நூலின் பிரதியொன்றை கோட்டாபய தமக்கு வழங்கவில்லை எனவும், தமது வீட்டில் இந்த நூலின் பிரதியொன்று கூட இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவின் நூலை வாசிக்க போவதில்லை! பசில் | Basil Gota Book

இந்த நூல் வெளியீடு தொடர்பில் தமக்கு எவ்விதமான கோபமும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய நூல் ஒன்றை எழுதப் போவதாக தமக்கு தகவல் கிடைக்கப் பெற்றிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.