எதிர்வரும் 12, 13ம் திகதிகளில் மதுபான கடைகள் மூடப்படும்

Sinhala and Tamil New Year
By Kamal Apr 08, 2024 12:13 AM GMT

எதிர்வரும் 12 மற்றும் 13ம் திகதிகளில் மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இவ்வாறு மதுபான கடைகள் மூடப்பட உள்ளன.

சில்லறை விற்பனையில் ஈடுபடும் மதுபான விற்பனை நிலையங்கள் இவ்வாறு குறித்த தினங்களில் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12, 13ம் திகதிகளில் மதுபான கடைகள் மூடப்படும் | Bar Closed On 12 13

மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தின் பணிப்புரைக்கு அமைய இவ்வாறு மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட உள்ளன.

எனினும் சுற்றுலா பயணிகள் தங்கியிருக்கும் ஐந்து மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் மதுபான விற்பனையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.