டி-20 உலக கிண்ணத்தில் இருந்து நீக்கப்படுவீர்கள்! பங்களாதேஷுக்கு காலக்கெடு

Cricket Bangladesh Cricket Team T20 World Cup 2026
By Fathima Jan 21, 2026 01:30 PM GMT
Fathima

Fathima

டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் அணி இந்தியாவுக்குச் செல்லாவிட்டால், அவர்களுக்குப் பதிலாக வேறு ஒரு அணியைப் மாற்றீடு செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (21) தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பங்களாதேஷிற்குப் பதிலாக வேறு ஒரு நாடு சேர்க்கப்படும் என்பது குறித்து பங்களாதேஷ் அரசாங்கத்திற்கும் அந்த நாட்டு கிரிக்கெட் சபைக்கும் ஐ.சி.சி அறிவித்துள்ளது.

இதன்படி பங்களாதேஷ் அணி இந்தியாவுக்குச் செல்ல மறுப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக ஐ.சி.சியின் முழுநேர உறுப்பு நாடுகளின் பணிப்பாளர்கள் பங்கேற்புடன் இன்று நடைபெற்ற தீர்மானமிக்க கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாற்று அணி

இக்கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மாற்று அணியொன்றைப் பெயரிடுவதற்குப் பெரும்பாலானோர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

டி-20 உலக கிண்ணத்தில் இருந்து நீக்கப்படுவீர்கள்! பங்களாதேஷுக்கு காலக்கெடு | Bangladesh Eliminated From T20 Worldcup Icc

எவ்வாறாயினும், இந்தியாவில் விளையாடுவது குறித்த தமது இறுதி நிலைப்பாட்டை அறிவிக்க பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு ஐ.சி.சி மேலும் ஒரு நாள் அவகாசம் வழங்கியுள்ளது.

பங்களாதேஷ் தனது முடிவை மாற்றிக்கொள்ளாவிட்டால், 'C' குழுவில் பங்களாதேஷிற்குப் பதிலாக ஸ்கொட்லாந்து அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.