இந்தியா செல்ல மறுக்கும் பங்களாதேஸ் கிரிக்கெட் அணி

Cricket India Bangladesh Bangladesh Cricket Team
By Fathima Jan 14, 2026 06:26 AM GMT
Fathima

Fathima

இந்தியா மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான தற்போதைய கிரிக்கெட் மோதல் தொடர்கிறது.

இதன்படி டி20 உலகக்கிண்ண போட்டிக்காக இந்தியாவிற்கு வர பங்களாதேஸ் தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் சபை 

இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இந்தியாவிற்கு பயணம் செய்யப் போவதில்லை என்ற தனது முடிவில் பிடிவாதமாக இருப்பதாக பங்களாதேஸ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இந்தியா செல்ல மறுக்கும் பங்களாதேஸ் கிரிக்கெட் அணி | Bangladesh Continues To Refuse To Come To India

எனவே தமது போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே இலங்கை உட்பட்ட நாடுகளுக்கு மாற்ற வேண்டும் என அந்த நாட்டின் கிரிக்கட் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் உலகக் கிண்ண அட்டவணை ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுவிட்டதால், இப்போது மாற்ற முடியாது என்று ஐசிசி கூறினாலும், பங்களாதேஸ் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

போட்டிகளின் அட்டவணையின்படி, பங்களாதேஸ் அணி, கொல்கத்தாவில் 3 போட்டிகளிலும், மும்பையில் 1 போட்டியிலும் விளையாட வேண்டும். முன்னதாக, பங்களாதேஸில் இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளை காரணம் காட்டி, ஐபிஎல்லியின் கொல்கத்தா அணியில் இருந்து முஸ்தபிசுர் ரஹ்மான் நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தே, பங்களாதேஸ் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை இந்த இந்திய மறுப்பை வெளியிட்டு வருகிறது.