நாட்டில் பதிவு செய்யப்படாத தொலைபேசிகள் பயன்படுத்துவதற்கு தடை

Sri Lanka Sri Lankan Peoples Mobile Phones
By Laksi Jan 09, 2025 08:19 AM GMT
Laksi

Laksi

எதிர்காலத்தில் நாட்டில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் (TRC) பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டிற்குள் சட்டவிரோதமாக தகவல் தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவதே இதன் நோக்கம் என்று அதன் பணிப்பாளர் ஜெனரல் ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுங்கள்: ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுங்கள்: ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

புதிய திட்டம்

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மாத இறுதிக்குள் இதற்காக ஒரு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

நாட்டில் பதிவு செய்யப்படாத தொலைபேசிகள் பயன்படுத்துவதற்கு தடை | Ban On Unregistered Phones

இருப்பினும், இந்த புதிய திட்டம் தற்போது பயன்படுத்தப்படும் கையடக்க தொலைபேசிகளில் தலையிடாது .

முறையான தரநிலைகள் இல்லாமல் சட்டவிரோத தகவல் தொடர்பு சாதனங்களை வாங்குவதன் மூலம் நாட்டு மக்கள் பல்வேறு சிரமங்களையும் தடைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

நாட்டில் உள்ள நுகர்வோருக்கு இதுபோன்ற சாதனங்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பது எமது நிறுவனத்தின் முக்கிய பொறுப்பாகும்.இதற்காக, இந்த மாத இறுதிக்குள் ஒரு தானியங்கி அமைப்பை செயல்படுத்த எதிர்பார்க்கின்றோம்.

நாட்டில் பதிவு செய்யப்படாத தொலைபேசிகள் பயன்படுத்துவதற்கு தடை | Ban On Unregistered Phones

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், இறுதியில் நாட்டிற்குள் சட்டவிரோதமாக கையடக்க தொலைபேசிகளை இறக்குமதி செய்வதைத் தடுப்பதும் இதன் நோக்கமாகும்.

"இந்த அமைப்பு தற்போது பயன்பாட்டில் உள்ள எந்த கையடக்க தொலைபேசிகளையும் பாதிக்காது என்பதுடன், வெளிநாட்டினர் பயன்படுத்தும் தொலைபேசிகளுக்கும் எந்த தடையும் ஏற்படுத்தாது என்றார்.

அம்பாறையில் வீதிகளின் பெயர் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டமையினால் சிரமம்

அம்பாறையில் வீதிகளின் பெயர் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டமையினால் சிரமம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW