இறக்குமதி தடை தொடர்பாக வெளியாகியுள்ள வர்த்தமானி

Sri Lanka Sri Lanka Government Gazette New Gazette
By Fathima Apr 10, 2023 06:07 AM GMT

இறக்குமதி தடை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலொன்று இன்றைய தினம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடயத்தை மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பணவியல், பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

இறக்குமதி தடை தொடர்பாக வெளியாகியுள்ள வர்த்தமானி | Ban In Sri Lanka Gazette Release

இறக்குமதிக்கான தடை

குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர் ஜூன் முதலாம் திகதி முதல் பிளாஸ்டிக் தொடர்பான பொருட்களின் இறக்குமதிக்கான தடை நடைமுறைக்கு வரும்.

அதன்படி, பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் துணைக்கருவிகள், பிளாஸ்டிக் மேஜைப் பாத்திரங்கள், சமையலறை பாத்திரங்கள், பிளாஸ்டிக் சுகாதார கழிவறை பொருத்துதல்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், யோகட் கோப்பை தவிர, ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் கோப்பைகள், பிளாஸ்டிக் கரண்டி, முட்கரண்டி, கத்தி, பிளாஸ்டிக் இடியப்ப தட்டு, செயற்கை பூக்கள், இலைகள் மற்றும் பழங்கள் ஆகியவை தடை செய்யப்பட உள்ளன.