ஹிருணிக்காவிற்கு பிணை

Hirunika Premachandra
By Mayuri Jul 22, 2024 05:07 AM GMT
Mayuri

Mayuri

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் செல்ல செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

கடூழிய சிறைத் தண்டனை

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி தெமட்டகொட கடையொன்றில் பணிபுரிந்த அமில பிரியங்க என்ற இளைஞனை கடத்திச் சென்று தாக்கியமை உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுக்களில் ஹிருணிக்கா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனையும் 3 லட்சத்து 60ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஹிருணிக்காவிற்கு பிணை | Bail To Hirunika

தண்டனைகளுக்கு எதிராக ஹிருணிகா பிரேமச்சந்திர மேன்முறையீடு செய்த நிலையில், அவரை பிணையில் விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW