பொடி மெனிகே தொடருந்தில் தீ பரவல் : அவதியில் பயணிகள்

Badulla Colombo Fire Accident
By Fathima Jun 03, 2024 09:23 AM GMT

பதுளை(Badulla)யில் இருந்து கொழும்பு(Colombo) கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிகே தொடருந்தில் தீ பரவியுள்ளது.

இன்று காலை பதுளையில் இருந்து பயணிக்க ஆரம்பித்த தொடருந்தின் பின் இயந்திரத்தில் தீ பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹப்புத்தளை நிலையத்திற்கு அருகில் தொடருந்தில் தீ பரவியதாகவும், ஹப்புத்தளை நிலையத்திற்கு வந்த பின்னர் தீ அணைக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

தீ பரவல்

தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

 பொடி மெனிகே தொடருந்தில் தீ பரவல் : அவதியில் பயணிகள் | Badulla To Colombo Train Accident Today

தற்போது பொடி மெனிகேவின் தொடருந்து ஹப்புத்தளை நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.