தடம் புரண்ட பதுளை – கொழும்பு இரவு தபால் புகையிரதம்

Sri Lanka Sri Lanka Railways Department of Railways Railways
By Shalini Balachandran Jul 05, 2024 06:27 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவு தபால் புகையிரதம் சற்றுமுன்னர் தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவமானது இன்று (05) இரவு இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில், பண்டாரவளை மற்றும் தியத்தலாவ நிலையங்களுக்கு இடையில் குறித்த புகையிரதம் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரதம் திணைக்களம்

இதனடிப்படையில், இரவு நேர அஞ்சல் புகையிரதமானது  இரண்டு இயந்திரங்களைக் கொண்ட நிலையில் புகையிரதத்தின் முன்பக்க இயந்திரம் பண்டாரவளைக்கும் மற்றும் தியத்தலாவைக்கும் இடையிலான பாலத்தில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடம் புரண்ட பதுளை – கொழும்பு இரவு தபால் புகையிரதம் | Badula Colombo Night Mail Train Derailed

அத்தோடு, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணிக்கும் 1017 என்ற விசேட அதிவேக புகையிரதம் ஹப்புத்தளை புகையிரதம் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரதம் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், புகையிரதத்தை சீரமைப்பதற்காக பதுளை நிலையத்திற்கு புகையிரதம் அவசர ஊழியர்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW