களுவங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தை மூட முயற்சியா
மட்டக்களப்பு - களுவங்கேணி மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் செயலிழக்க வைத்து, அதனை மூடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா முயற்சித்து வருவதாக, ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் குற்றம் சுமத்தியுள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஹிஸ்புல்லாஹ் மறுப்பு
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமாரின் குற்றச்சாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மறுப்பதாக, அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கடற்றொழிலாளர்களின் நலன் கருதி, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை தொடர்ந்தும் செயற்படுத்த வேண்டும் என கடந்த வாரம் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தியதாகவும், அவருடைய ஊடகப் பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது.