நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் : மகிந்தானந்த எம்.பி கைது

Sri Lanka Police Parliament of Sri Lanka Mahindananda Aluthgamage
By Madheeha_Naz Jun 06, 2024 06:25 AM GMT

சக நாடாளுமன்ற உறுப்பினரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சக நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ச (Gunathilaka Rajapaksha ) தற்போது இராணுவ வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், அதற்கு இரும்பு தகடு பொருத்தும் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவரது மகன் கோட்டை பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.